Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sri Bhoomiswarar Temple - Marakanam Village -Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ கிரிஜாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ பூமீஸ்வரர் திருக்கோயில் -மரக்காணம்


Arulmigu Sri Bhoomiswarar Temple - Marakanam Village -Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பூமீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு கிரிஜாம்பிகை

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ChengalpattuDistrict_ BhoomiswararTemple_Marakanam-chengalpattu_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ கிரிஜாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ பூமீஸ்வரர் திருக்கோயில் -மரக்காணம்

பூமிக்கு அடியில் பரவியிருக்கும் நீர் ஊற்றுக்கண் வழியாக வெளிப்படுவது போல், எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் திருவருள் கடாட்சம் நமக்காக வெளிப்படும் இடம் திருக்கோயில்கள். நம் மனதைச் செம்மைப்படுத்தி, செயல்களைச் சிறப்பாக்கி வாழ்வைப் புனிதமாக்கும் வல்லமைகொண்டவை ஆலயங்கள். எனவேதான், நம் தேசத்தை ஆண்ட மன்னர்கள் பலரும் நாட்டு மக்கள் நன்மை அடையும்பொருட்டு, எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணித்தார்கள். அவ்வகை யில் சோழர்கள் அமைத்த ஆலயங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நானிலம் சிறக்க நல்லருளைப் பொழிந்து திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில்.

அருள்மிகு ஸ்ரீ கிரிஜாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ பூமீஸ்வரர் திருக்கோயில் -மரக்காணம் தல வரலாறு.

வேதகாலத்தில், தன் சிந்தையில் எப்போதும் சிவனை நிறுத்திப் பூசித்த சிவபக்தா் ஒருவா் இத்தலத்தில் வாழ்ந்து வந்தாா். அவரிடம் தனது திருவிளையாடலை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்ட ஈசன், முனிவராக உருவெடுத்து அந்த பக்தாின் இல்லத்துக்குச் சென்றாா். முனிவரை வரவேற்று உபசாித்த சிவனடியாா் அவருக்காக அறுசுவை உணவு தயாரித்தார். பின்னர் முனிவரைப் பசியாற அழைத்தாா்.

உணவருந்துவதற்குமுன் சிவாலய தரிசனமும் பூஜையும் செய்வது வழக்கம் என்று அடியாாிடம் கூறினாா் முனிவா். அருகில் சிவத்தலம் ஏதும் இல்லாததால் செய்வதறியாது திகைத்த அடியாா், பின்னர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, தன்னி டமிருந்த `மரக்கால் படியை' குப்புறக் கவிழ்த்து, அதையே சிவலிங்கமாகக் கருதி, நீறு பூசி மலா்களால் அலங்காித்து முனிவரை பூஜைக்கு அழைத் தாா். முனிவரும் சிவபூஜையை இனிதே முடித்து, உணவருந்தி மகிழ்ந்து, அடியாரை ஆசீா்வதித்து விடைபெற்றார். அவர் சென்றதும், சிவனடியாா் மரக்கால்படியை எடுக்க முயற்சி செய்ய, அதை அசைக்கக்கூட முடியவில்லை அடியவரால். மரக்கால் படியைத் தரையிலிருந்து பெயா்த்தெடுப்பதற்காக உபகரணம் எடுக்கச் சென்ற அடியாா் திரும்பி வந்தபோது, அந்த இடத்தில் மரக்கால் படியைக் காணவில்லை. அதிா்ச்சியடைந்த சிவபக்தா் `மரக் காலைக் காணோம்' என்று சத்தமிட்டபடி, அதைத் தேடிச் சென்றார். தேடலின் விளைவாக, கடற்கரை மணலில் மரக்கால்படி சிவலிங்கமாகப் புதைந்திருப்பதைக் கண்டார். மெய்சிலிர்த்துப் போனவர், அந்த லிங்கத் திருமேனிக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட ஆரம்பித்தார்

செல்வங்கள் சேரும் நிலப் பிரச்னைகள் தீரும் ! பூமியிலிருந்து சுயம்புத் திருமேனியாக வெளிப்பட்ட இந்த ஈசனைத் தொழுது வழிபட்டால், நிலம் தொடா்பான பிரச்னை களில் விரைவில் தீா்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரச்னைகள் நீங்கவேண்டும் என்று இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல் பலித்ததும், ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். இத்திருக்கோயில் அம்பிகையின் திருநாமம் ஸ்ரீகிாிஜாம்பிகை. கருணை ததும்பும் திருமுக மண்ட லத்தோடு, அபய-வரத ஹஸ்தத் திருக்கோலத்தில் சாந்த சொரூபி யாகத் திகழ்கிறாள் அம்பிகை. பக்தா்களுடைய துன்பங்களை வாஞ்சையோடு துடைத்தெறியும் சக்தி, அன்னையின் கடைக்கண் பாா்வையில் உள்ளதை நிதா்சன மாகத் தாிசிக்க முடிகிறது.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில்
-மரக்காணம்
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 8:30 மணி வரை திறந்து இருக்கும்.



அமைவிடம்:

சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சோி செல்லும் சாலையில் 123 கி.மீ. தூரத்தில் உள்ளது புராதனமான மரக்காணம் பூமீஸ்வரா் திருக்கோயில். சென்னை திருவான்மியூரிலிருந்து பேருந்து வசதி உண்டு..